உலகில் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்த நிலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பா என்று அனைவரும் வியக்கும் வண்ணம் அமெரிக்க பிரஜை கே மைக்கல்சன் என்பவர் பீரில் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது இது மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக உள்ளது .
கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் (coil) 14-கேலன் கெக் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த சுருள் பீரை 300 டிகிரி வரை சூடாக்குகிறது.
பின்னர் அது பைக்கை முன்னோக்கி நகரச் செய்யும் முனைகளில் அதிக வெப்பமான நீராவியாக மாறி இயக்குகிறது.
முன்னதாக ராக்கெட்- பவர்டு கழிப்பறை, ஜெட் பவர்டு காபி பாட் ஆகிய கருவிகளை கே மைக்கேல்சன் உருவாக்கினார்.