அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் இளைஞன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.
வேர்ஜினியா கொமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டருகு்கு வெளியே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.
18 மற்றும் 36 வயதுடைய இருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.