Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பில் கேட்ஸின் அலுவலகத்தில் பாலியல் கேள்விகள்!

பில் கேட்ஸின் அலுவலகத்தில் பாலியல் கேள்விகள்!

1 minutes read

உலக பணக்காரர்களில் ஒருவராக பில் கேட்ஸின் தனியார் அலுவலகத்தில் வேலை தேடிய சில பெண்களிடம் சில பொருத்தமற்ற பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.

பில் கேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கும் பெண்களிடம் வெளிப்படையாகவே பாலியல் மற்றும் உடலுறவு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டதாக தி வால் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்களிடம் அவர்களின் பாலியல் வரலாறு மற்றும் ஆபாசப் படங்கள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இதற்கு முன்பு வாழ்கையில் என்றாவது போதைப்பொருளைப் பயன்படுத்தி உள்ளீர்களா? மற்றும் எப்போதாவது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளீர்கள் என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.

அங்குள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றே இந்த விரிவான நேர்காணலை நடத்துகிறது.

எனினும், பில் கேட்ஸ் அலுவலகத்தில் பல தகவல்கள் இருக்கும். யாரிடமாவது இதுபோன்ற விவகாரங்களில் சிக்கி, அச்சுறுத்தப்பட்டு செய்யப்படுபவராக இருந்தால் குறித்த தகவல்கள் எளிதாக வெளியாகலாம் என்பதாலேயே பில் கேட்ஸ் தரப்பில் இந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More