செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா காட்டுத் தீ பாதிப்பு; ஹவாய் சென்ற அமெரிக்க ஜனாதிபதி

காட்டுத் தீ பாதிப்பு; ஹவாய் சென்ற அமெரிக்க ஜனாதிபதி

0 minutes read

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலுள்ள மாவீ தீவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீச் சம்பவம் ஏற்படுத்திய சேதங்களைப் பார்வையிட ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (21) அங்கு நேரில் சென்றார்.

தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி, பேரிடரைக் கையாளத் தமது அரசாங்கம் விரைந்து செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பைடனின் வருகை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என்று தாம் நம்புவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மாவீ தீவில் பரவிய காட்டுத் தீச் சம்பவத்தில் குறைந்தது 114 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.