செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வு

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வு

0 minutes read

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது.

இதனால் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்து வந்தார்.

ஆனால், கெவின் மெக்கார்த்தி, ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர்.

புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால் சபாநாயகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், தற்போது குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகர் தேர்வில் மைக் ஜான்சன் 220 வாக்குகள் பெற்று, பாராளுமன்ற பிரநிதிநிதிகள் சபை சபாநாயராக வெற்றி பெற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.