செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பாகிஸ்தானில் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பாகிஸ்தானில் தடை

0 minutes read

2024ஆம் பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன. உலக நாடுகள் அனைத்தும் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காபந்து (caretaker) பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.

“விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தனீர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர்.

“அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது ” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.