செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் “பூஞ்சை தொற்று” பாதிப்பு கண்டறியப்பட்டது

அமெரிக்காவில் “பூஞ்சை தொற்று” பாதிப்பு கண்டறியப்பட்டது

1 minutes read

அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த மாதம் நபர் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ்’ எனும் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ்’ பாதிப்பு தற்போது குறைவாக காணப்பட்டாலும் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

காரணம், இந்த பூஞ்சை தொற்று மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளது.

கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று

அத்துடன், ‛கேண்டிடா ஆரிஸ்’ பூஞ்சை தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.

இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

பூஞ்சை தொற்று பாதிப்பு

இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும். உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும்.

மேலும் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உட்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும். பாக்டீரியா தொற்று ஏற்படும் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க, அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.

இந்த ‛கேண்டிடா ஆரிஸ்’ பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது.

இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும்.

தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவர். அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். அத்துடன், நோய் தொற்றுக்கு உள்ளானவரை சந்திக்க செல்வோர் பாதுகாப்பு உடை அணிய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால்? சானிடைசர் போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

தொற்றின் வரலாறு

‛கேண்டிடா ஆரிஸ்’ முதன் முதலில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட் இந்த பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.