Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா எலானின் மார்க்கெட் சரிந்தது; உலக பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர்!

எலானின் மார்க்கெட் சரிந்தது; உலக பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர்!

1 minutes read

உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் மார்க்கெட் சரிந்தது. இதனால் முதல் இடத்தை அவர் இழந்துள்ளார்.

உலக பங்குச் சந்தையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் எலானின் நிகர சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டொலராக குறைந்துள்ளது.

ஆனால், அமேசான் நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலக கோடீஸ்வரரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எலான் மஸ்க் – பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

2022இல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது. டெஸ்லாவின் பங்கு 2021இல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஷாங்காயில் இருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவை கண்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More