அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செல்வந்தனர் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
சர்ச்சைக்குரிய செலவின மசோதாவுக்குக் குடியரசுக் கட்சியினர் வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகத் எலான் மஸ்க் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அவ்வாறு செய்தால் மஸ்க் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்குமுன் நெருக்கமாக இருந்த இருவருக்கும் இடையே இப்போது கருத்து வேறுபாடுகளால் கடும் வாக்குவாதம் நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகராகவும் எலான் மஸ்க் இருந்துள்ள நிலையில், தற்போது இருவருக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
அமெரிக்காவில் புதியதோர் அரசியல் கட்சி தேவை என்று எலான் தெரிவித்துள்ளார். தமது X சமூக ஊடகத் தளத்தில் அதற்கான வாக்கெடுப்பை அவர் நடத்தினார். அமெரிக்க மக்கள்தொகையில் நடுநிலையாக இருக்கும் 80 சதவீதத்தினரை பிரதிநிதிக்க ஒரு புதிய கட்சி தேவையா என்று X தளத்தில் தம்முடன் இணைந்திருப்போரிடம் மஸ்க் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.