தெற்கு இலண்டனில் பூனைகளின் தொடர் மரணங்கள் குறித்து MyLondon செய்தித்தாள் நடத்திய பிரத்யேக விசாரணையின் விளைவாக, முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் ஒருவர் ஐந்து விலங்கு கொடுமை வழக்குகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அலெக்சாண்டர் வாரன் (வயது 38) என்பவர் ஐந்து பூனைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு அநாவசிய துன்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். இந்த தொடர் தாக்குதல்கள் குறித்து இந்த செய்தித்தாள் முதலில் பிப்ரவரி மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
டல்ஸ் ஹில்லில் உள்ள ருடால் ஹவுஸைச் சேர்ந்த வாரன் மீது, லம்பேத், சவுத்வார்க், மற்றும் பிரிக்ஸ்டன் ஆகிய பகுதிகளில் ஐந்து சந்தர்ப்பங்களில் குறிப்பாக நவம்பர் 5, 2024; ஜனவரி 8, 2025; மற்றும் பிப்ரவரி 12, 13, மற்றும் 21, 2025 ஆகிய திகதிகளில் பூனைகளுக்குத் தீங்கு விளைவிக்க தனது நாய்களான பெல்லா மற்றும் பிரின்ஸ் ஆகியவற்றை அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
வாரன் ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்குக்கு, அதாவது பூனைக்கு, அநாவசிய துன்பத்தை ஏற்படுத்தினார் என்றும், குறிப்பாக நாய்கள் அதைத் தாக்குவதைத் தடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செயலானது ‘விலங்குகள் நலச் சட்டம் 2006’ (Animal Welfare Act 2006) விதிமுறைகளுக்கு முரணானது. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, நாய்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது.
வாரன் ஒக்டோபர் மாதம் க்ரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இன்னர் இலண்டன் கிரவுன் நீதிமன்றில் ஆஜரானார்.
அவர் நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த விசாரணை மார்ச் 15, 2027 அன்று அதே நீதிமன்றத்தில் நடைபெறும்.