செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கணவனால் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் எச்சரிக்கை!

கணவனால் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் எச்சரிக்கை!

1 minutes read

டெவோனைச் சேர்ந்த 43 வயதுடைய ஜோ வாட்ஸ் (Zoe Watts) என்ற பெண், தனது கணவனால் பல ஆண்டுகளாக போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். பிபிசி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

18 ஆண்டுகால உறவில் இருந்த அவரது கணவர், இரவில் அவரது தேநீரில் தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்து, அவர் மயக்கத்தில் இருந்தபோது அவரை வன்கொடுமை செய்ததோடு, அதைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

2011 முதல் 2016 வரையிலான 06 ஆண்டுகளில் இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன. ஒரு ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திலிருந்து திரும்பிய பிறகு, தனது கணவர் தனக்குத் தெரியாமல் தேநீரில் மருந்து கலந்து வன்கொடுமை செய்ததை ஜோவிடம் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது கணவருக்கு 2022 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மயக்க நிலையில் இருந்ததால் தனக்கு நேர்ந்தது வன்கொடுமை என்பதைத் தொடக்கத்தில் உணரவில்லை என்றும், பொலிஸார் விளக்கிய பின்னரே அதைத் தான் புரிந்துகொண்டதாகவும் ஜோ குறிப்பிட்டார்.

இந்தக் கொடுமையிலிருந்து மீண்ட ஜோ வாட்ஸ், தற்போது இதேபோன்ற பாதிப்புக்குள்ளான பிற பெண்களுக்கு உதவ #EndEyeCheck என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

போதை மருந்து மூலம் செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், மயக்க நிலையில் இருக்கும் பெண்களைத் துன்புறுத்தும் வீடியோக்களை இணையத்தில் பரப்புவதற்கு எதிராகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் இதுவரை 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது பாதிப்புகளை ஜோவிடம் பகிர்ந்துள்ளனர்.

அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், நம்பிக்கைக்குரிய நெருக்கமானவர்களாலும் இத்தகைய ‘உள்நாட்டு போதை மருந்து கலப்பு’ (domestic spiking) நிகழலாம் என்பதை ஜோ எச்சரிக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி பொலிஸ் மற்றும் மருத்துவ உதவியை நாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.