செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலகளாவிய மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம்; சிக்கலைச் சரிசெய்ய நிறுவனம் தீவிர முயற்சி

உலகளாவிய மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம்; சிக்கலைச் சரிசெய்ய நிறுவனம் தீவிர முயற்சி

1 minutes read

உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்துள்ள சேவை முடக்கத்தைச் சரிசெய்வதற்கு மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft Teams), அவுட்லுக் (Outlook) மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான கோபைலட் (Copilot) உள்ளிட்ட முக்கிய சேவைகள் “இணைப்புச் சிக்கல்கள்” காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சேவை முடக்கம் சைபர் தாக்குதலால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேவைகளைக் கண்காணிக்கும் இணையத்தளத்தின் தரவுகளின்படி, 74 நாடுகளில் உள்ள பயனர்கள் இந்தச் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்தச் சேவைத் தடை 8 மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருவதாகவும் குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில்நுட்பச் சிக்கலைச் சரிசெய்வதற்கான தமது முயற்சிகள் “எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை” என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, தமது தொழில்நுட்பக் குழுவினர் இதில் சாதகமான முடிவுகளைக் கண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தச் சேவை முடக்கம் சைபர் தாக்குதல் இல்லையென்றால், இது “நம்ப முடியாத அளவிலான திறமையின்மை” என்று தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் பிபிசி (BBC) செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகளவில் 43 கோடிக்கும் அதிகமானோர் மைக்ரோசாஃப்ட் 365 (Microsoft 365) செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நாளை முதல் நுழைவு சீட்டுகள் விநியோகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.