செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நத்தார் பண்டிகை: ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா புதிய பாதுகாப்பு எச்சரிக்கை

நத்தார் பண்டிகை: ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா புதிய பாதுகாப்பு எச்சரிக்கை

1 minutes read

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட விடுமுறைக் காலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு அபாயங்கள் நிலவக்கூடும் எனச் சுட்டிக்காட்டி, ஐரோப்பாவுக்குப் பயணம் செய்யும் அல்லது அங்கு வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்கா புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, பொதுக் கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடல்கள் இடம்பெறவுள்ள நிலையில், பல்கேரியாவிலுள்ள (Bulgaria) அமெரிக்கத் தூதரகத்தினால் நவம்பர் 16 ஆம் திகதி இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கான அமெரிக்கப் பயண ஆலோசனைகளில் பயங்கரவாதம் நீண்டகாலமாக ஒரு பாதுகாப்புக் கவலையாக அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், புதிதாக அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதத் சதித்திட்டம் குறித்த எச்சரிக்கையாக அன்றி, விடுமுறைக் காலத்திற்கு முன்னரான முன்னெச்சரிக்கை நினைவூட்டலாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நத்தார் சந்தைகள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிகுந்த பொது இடங்கள் பயங்கரவாத அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் இலக்குகளாக அமையக்கூடும் எனத் தூதரகம் எச்சரித்துள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி அல்லது மிகக் குறைந்த முன்னறிவிப்புடன் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தூதரகம், பண்டிகைக் கால நிகழ்வுகள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் அமெரிக்கர்கள் மேலதிக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், உடனடித் தாக்குதல் அச்சுறுத்தல் கொண்ட குறிப்பிட்டவொரு ஐரோப்பிய நாட்டையோ அல்லது உறுதியான பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்தையோ இந்தப் புதிய எச்சரிக்கை அடையாளப்படுத்தவில்லை.

தமது சுற்றுப்புறம் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் செய்திகளைத் தொடர்ச்சியாக அவதானிக்குமாறும், ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அமெரிக்க அதிகாரிகள் தமது பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.