Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கனடாவில் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள்

கனடாவில் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள்

1 minutes read

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முந்தினம் காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் அவர்கள், காலஞ்சென்ற சிவநாதன், சிவானுகூலம் தம்பதிகள், லோகாம்பிகை, காலஞ்சென்ற நவரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சிவராமன் கிருஷாந்தினி தம்பதிகளின் ஆருயிர்ச் செல்வியும்,

சிவசக்தி(மாதுமை), சிவதீரன்(அபிஷன்), சிவரமணன்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவரது பூதவுடல் Sunday, 02 Aug 2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கனடிய செய்திகள் தெரிவிக்கையில்,

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More