முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லசாமி காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி அவரது 95 ஆவது வயதில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

எம்.எஸ் செல்லசாமி மூத்த வயது காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1926-12-11ஆம் திகதி தலவாக்கலை, மடகும்புற தோட்டத்தில் சுந்தரலிங்கம் அன்னப்பூரணிக்கு மகனாக பிறந்த அவர், ஹட்டன்- சென்.பொஸ்கோ பாடசாலையில் தமது ஆரம்ப கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

சமூக சேவைகளிலும், பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

42 வருடம் அரசியல் அனுபவம் பெற்ற இவர் 1988ஆம் ஆண்டு மாவட்ட சபை ஊடாக அரசியலுக்கு பிரவேசித்தார்.

1990 மாகாண சபை,1991 நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த இவர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி, கைத்தொழில் விஞ்ஞான அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்