மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெறபோவதாக அறிவிப்பு

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்திலேயே முடிவடைகின்றது. எனினும் செப்டெம்பர் மாதமே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 37 வருடங்கள் தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி  கொண்ட ஒருவர். அவ்வாறாயின் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே மஹிந்த தேசபிரியவின் இறுதி தேர்தல் பணியாக கூட அமையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்