சிறையிலிருந்து எம்பியான பிள்ளையான்அமைச்சர் ஆகிறார்

நாளைய அமைச்சரவை பதவியேற்பில் பிள்ளையான் கலந்து கொள்ள மாட்டார் என உறுதியாகியுள்ளது. பிள்ளையான் அணி பிரமுகர்கள் அதை உறுதி செய்தனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமனறத்தில் சத்திய பிரமாணம் செய்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணை கோரவுள்ளதாகவும், பிணையை பெற்றதும், அமைச்சு பதவியை ஏற்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளைய அமைச்சரவை பதவியேற்பிற்கு பிள்ளையானிற்கும் அழைப்பு: காத்திருக்கிறது அமைச்சு?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அமைச்சு பதவியை ஏற்கவும், நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கும் அழைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான அமைச்சு விபரம் இதுவரை வெளியாகவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சா அல்லது இராஜாங்க அமைச்சா என்பது இதுவரை தெரியவில்லை.

இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படவே அதிக சாத்தியமுள்ளதாக தெரிகிறது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ள பிள்ளையான், சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். அவர் ஒரு கொலையாளியென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்தபோதும், அந்த பிரச்சாரத்தை நிராகரித்த மட்டக்களப்பு தமிழ் மக்கள் மாவட்டத்தின் விருப்பு வாக்கில் அவரை முதலிடமாக்கினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் எம்.பி ஜோசெப் பரராஜசிங்கத்தின் கொலை விவகாரத்தில் அவர் சிறையில் உள்ளார்.

நாளை கண்டியில் நடைபெறும் பதவியேற்பில் பிள்ளையான் கலந்து கொள்வதற்கான சட்டபூர்வ அனுமதி வழங்குவது குறித்த கலந்துரையாடல்கள் நேற்று இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

கண்டியில் நடைபெறும் விழாவில் பில்லயனுக்கு சட்டப்பூர்வ அனுமதி கோருவதற்கான விவாதங்கள் நேற்று நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர்