முள்ளிவாய்க்காலில் சி.வி. அஞ்சலி

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலைச் சென்ற குறித்த குழுவினர் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிற்பரன், அனந்தி சசிதரன் உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5Shares

ஆசிரியர்