எதிர்கால அரசியல் தொடர்பில் கருணாவின் அறிவிப்பு

டைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக கருணா என அழைக்கப்படும் விாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி மற்றும் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்