உயிர்த்த ஞாயிறு தாக்குதல் | ரணிலை விசாரணைக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இரா சம்பந்தன். அநுரகுமார திசாநாயக்க, எம் .ஏ சுமந்திரன் உள்ளிட்ட மேலும் சிலரையும் ஜனாதிபதி ஆணைக்குழுல் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்