இலங்கை மின்சார சபை விடுத்த மகிழ்ச்சிச் செய்தி!

நாடு முழுவதும் நாளை முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் நான்கு நாட்களுக்கு பகுதியளவில் மின்சாரம் தடை செய்யவுள்ளதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்களாகும் என மின் நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் நாளை முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஆசிரியர்