முன்னணியுடனான எனது பயணம் தொடரும் | மணிவண்ணன்

20200822 112520

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் தானே இருப்பேன் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான எனது பயணம் தொடரும் எனவும் அக்கட்சியின் உறுப்பினர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்த என்னை பொதுத் தேர்தல் முடிவடைந்த கையுடன் எவ்வித விசாரணைகளும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை என் மீது முன்வைத்தனர். அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கினார்கள்.

எனினும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதிய விளக்கங்களை கட்சியின் தலைவரிடம் வழங்கியுள்ளேன்.எனவே கட்சியின் இந்த இரு முக்கிய பதவிகளிலும் நானே தொடர்ந்தும் இருப்பேன். எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்