அதிகாரபகிர்வு தேவையில்லை என்பதே வடபகுதி மக்களின் செய்தியாம் | உதயகம்மன்பில

வடபகுதி வேட்பாளர்கள் புதிய அரசியல் கட்சிகளை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வடக்குகிழக்கு வாக்காளர்களின் செய்திகளை மிகவும் கவனமாக ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்விற்கு பதில் அபிவிருத்தியே தேவை என்பதே அவர்களின் செய்தி எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

தென்பகுதியும் அரசாங்கமும் இந்த தெளிவான செய்தியை புரிந்துகொண்டு வடக்குகிழக்கு சகோதாரர்களை அரவணைப்பதுடன் அவர்களுடன் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்