ஆனைவிழுந்தான் வனப்பகுதி அழிவின் பின்புலத்தில் உள்ளவர்

ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை அழிப்பதற்கான நடவடிக்கை, வர்த்தகர் ஒருவரின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

குறித்த வனப்பகுதியை இயந்திர வாகனம் ஒன்றின் ஊடாக அழித்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலேயே இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரான வர்த்தகரை, கைது செய்வதற்கான நடவடிக்கையை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தளத்திலுள்ள ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலையத்தின் ஒரு பகுதியை அழிக்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் அழிவை எதிர்நோக்கிய தேசிய ரீதியான அரியவகை உயிரினங்கள் பலவும், விசேட பறவை இனங்களையும் இந்த  வனப்பகுதியில் காண முடியும் என சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது நீர்காகம், கருவெல் கொக்கு உட்பட பல வகையான கொக்கு இனங்களும், அரிய ஊர்வனங்களும் நிலத்திலும் நீரிலும் இங்கு வாழ்கின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தகைய பல சிறப்பியல்புகள் கொண்ட ஆனைவிழுந்தான் வனப்பகுதியின் ஒரு பகுதியை அழிவுக்கு ஏற்படுத்தியுள்ளமை கவலையளிப்பதாக சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆசிரியர்