பட்டதாரி பயிலுனர்களுக்கு இராணுவ பயிற்சி! | ஞானசார தேரர் விடுத்த கோரிக்கை

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகளுக்கு பதிலாக அரச நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகளே வழங்கப்படவேண்டுமென தென்னே ஞானானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 5 படிமுறையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அவற்றில் முதல் பயிற்சி முழுமையான ஈராணுவ பயிற்சியாகும்.

பட்டதாரிகளுக்கான இந்தப் பயிற்சிகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்