100 இள வயது ஜோடிகள் பொலிஸாரினால் கைது

முறைகேடான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், 100 இள வயது ஜோடிகளை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் புனித பூமியில், பெரும்பாலான இள வயதுடைய ஜோடிகள் முறைகேடான முறையில் நடந்து கொள்வதாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைவாக இள வயதுடைய 100 ஜோடிகளை இவ்வாறு  செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், கல்வி நிலையங்களுக்கு செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து, இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பொது இடங்களில் முறைகேடாக நடந்து கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள பிள்ளைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆசிரியர்