தேசிய அரச நாடக விழாவில் கிளிநொச்சி நாடகத்திற்கு 11 விருதுகள்!

கிளிநொச்சியை சேர்ந்த நாடக கலைஞர்களாதன அ. சத்தியானந்தம் மற்றும் பிரதீப் ஆகியோரின் நெறியாளகையில் உருவான “மண்குளித்து” நாடகம் 11 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Image may contain: 1 person, closeup

இதில் ஈழத்து இசை அமைப்பாளர் செயல்வீரன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.

அத்துடன் நாடக நெறியாள்கைக்கான விருதும், சிறந்த நடிகர்களுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மண் குளித்து நாடகம், பூர்வீக நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்க ஒரு இன மக்கள் நடாத்தும் போராட்டத்தைப் பற்றி பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகம் தேசிய மட்ட போட்டிக்கு சென்றபோது கிளி பீப்பிள் நிதி பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நாடம் தேசிய விருதுகளை அள்ளியுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள கிளி பீப்பிள் அமைப்பு அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

வணக்கம் லண்டன் கிளிநொச்சி நிருபர்

ஆசிரியர்