Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரம்ஸி ரஸீக் மீதான வழக்குகளை உடன் நீக்க வேண்டும்! | A.I

ரம்ஸி ரஸீக் மீதான வழக்குகளை உடன் நீக்க வேண்டும்! | A.I

2 minutes read
மரணதண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை - ITCTAMIL NEWS

சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மீதான நிலுவையிலுள்ள வழக்குகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செயற்பாட்டாளருமான ரம்ஸி ரஸீக், அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தகவல் ஒன்றுக்காக கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகையில், “ரம்ஸி ரஸீக்கிற்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருக்கிறது.

மிகவும் மோசமான உடல்நிலையுடன் சுமார் ஐந்து மாத காலத்தை சிறையில் கழித்த பின்னர் மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணையக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமையைப் பயன்படுத்தியமைக்காக இவ்வாறு அவர் நீதித்துறையின் துன்புறுத்தலுக்கு ஆளாயிருக்கக்கூடாது. உண்மையில் இதற்காக அவர் ஒருநாளைக்கூட சிறைச்சாலையில் கழித்திருக்கக் கூடாது.

இந்நிலையில் ரம்ஸி ரஸீக் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருப்பின் அவையனைத்தும் நீக்கப்பட வேண்டும் என உரிய அரச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்துகிறோம்.

இதேவேளை, அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு, மூட்டுவாதம் உள்ளிட்ட சில நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்ட ரம்ஸி ரஸீக், சுமார் 161 நாட்கள் வரை விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு மேல்நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது.

ரம்ஸி ரஸீக் விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More