ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

 ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேனியடி பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த 45 வயது பெண்ணையும் கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 55,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் போதைப் பொருள் விற்பனையாளராக அடையாளங் காணப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணின் கேனியடி பிரதேச வீட்டை சோதனை நடத்தியதுடன் சந்தேக நபரையும் சோதனை செய்ததில் 600 மில்லி கிராம் கொண்ட 10 பக்கெட்டுகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் திருகோணமலை பதில் நிதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியர்