புகையிரதத்தில் குதித்து இளைஞன் ஒருவன் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரத்தத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் வைத்து குறித்த இளைஞன் புகையிரத்ததில் குதித்து உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யுகேந்திரன் அஜந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்