நாளை முதல் போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம்

விபத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் வீதி ஒழுங்குகளை முறையாக  கடைப்பிடிக்க வேண்டும் - போக்குவரத்து பொலிஸ் பிரிவு - News View

பஸ் முன்னுரிமை பாதையை பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ் மற்றும் வாகனங்கள் மாத்திரமே நாளைமுதல் பயன்படுத்த முடியும் என்ற பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு நாளை முதல் முன்னுரிமை பஸ் பாதையில் பயணிக்க முடியாது. அதனால் அவை வெளிப்புற பாதையை பயன்படுத்தலாம்.

இவ்வாறு காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆசிரியர்