கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கிளி/ இந்துக் கல்லூரி அதிபர் திரு விக்னராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த செயலமர்வில் பாதுகாப்பான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு பெற்றோர் வழங்க வேண்டிய பாதுகாப்பு, எமது சமுதாயத்தில் ஒரு சிலருடையே காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைவரும் கரிசனையோடு எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆராயப்பட்டு விளக்கங்களும் வழங்கப்பட்டது

இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆகிய Dr. மனோகரன் அவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மீது கணிசமான அக்கறையோடு செயல்பவேண்டும் என்ற வகையில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்

நிகழ்வின் இறுதியில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவடைந்தது மேலும்

கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகிய கிளி இந்துக் கல்லூரியின் மாணவர்கள் கல்வி பெறுபேறுகளிலும் விளையாட்டிலும் ஏனைய செயற்பாடுகளிலும் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல சாதனைகளை படைத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்