Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை என்னையும் என் இரு வயது மகனையும் கொலை செய்வோம் என மிரட்டியது ஜே.வி.பி | மகிந்த தேசப்பிரிய

என்னையும் என் இரு வயது மகனையும் கொலை செய்வோம் என மிரட்டியது ஜே.வி.பி | மகிந்த தேசப்பிரிய

3 minutes read
வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை! மஹிந்த  தேசப்பிரிய - Tamilwin

1988 தேர்தலின் போது வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்லப்போவதாக அச்சுறுத்தினார்கள் என தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நான் அவர்களின் உத்தரவினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள்,
தனது தொழில்வாழ்க்கையின் போது எதிர்கொண்ட அச்சுறுத்தல் சவால்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் தேர்தல் நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய | Athavan News

கேள்வி ?: உங்கள் தொழில்வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றீர்களா?

பதில்: பல சவால்களை எதிர்கொண்டிருக்கின்றேன்-1982 முல்கிரிகல இடைத்தேர்தல் அவ்வாறானதொன்று.

1984 இல் அக்கீமன இடைத்தேர்தலின் போது அரசாங்க எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் மோதல் இடம்பெற்றது.நானும் மூத்த அதிகாரிகள் சிலரும் அந்த மோதலின் நடுவில் சிக்கிக்கொண்டோம்.
1988இல் தேர்தலுக்காக மனுக்களை பெறவேண்டிய நிலையிலிருந்தோம், அவ்வேளை வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்லப்போவதாக ஜேவிபியின் ஆயுதப்பிரிவான மக்கள் ஜனநாய முன்னணியை சேர்நதவர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர்.

மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார் | Athavan News

நான் அவர்களின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள், எச்சரிக்கும் கடிதமொன்றையும் கொடுத்துவிட்டு சென்றனர்.

அந்தநாட்களில் நான் அம்பலாங்கொடைக்கும் மாத்தறைக்கும் நாளாந்தம் பேருந்திலேயே பயணம் மேற்கொள்வேன், சிலவேளைகளில் புகையிரதத்தில் செல்வேன் ,எனது கைப்பைக்குள் பலஅச்சுறுத்தல் கடிதங்கள் காணப்படும்.

ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை பேருந்து சோதனை சாவடியொன்றில் நிறுத்தப்பட்டது,என்னிடம் ஜேவிபியின் கடிதங்கள் பல காணப்பட்டதால் நான் அவர்களின் ஆதரவாளன் என படையினர் நினைத்தனர்.

நான் எங்கிருந்து வருகின்றேன் என கேட்டு எனது அடையாள அட்டையை பார்த்த அவர்கள் நான் பொரம்ப பகுதியை சேர்ந்தவன் என்பதை கண்டுபிடித்தனர்.

அவ்வேளை பொரம்ப ஆனந்தய என்ற ஜேவிபி தலைவர் ஒருவர் இருந்தார், அவரை தெரியுமா என கேட்டனர், நான் அவர் எனது சகோதரர் தான் அவரை தெரியும் என குறிப்பிட்டேன்.எனது சகோதரரின் பெயர் ஆனந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தில் பயணித்த ஏனையவர்களை செல்வதற்கு அனுமதித்துவிட்டு என்னை தொடர்ந்து விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் எனது தொழில் என்னவென அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்,நான் உதவி தேர்தல் ஆணையாளர் என தெரிவித்தேன், அதற்கு அவர்கள் ஏன் அதனை முதலில் தெரிவிக்கவில்லை என கேட்டனர்.

நான் நீங்கள் முதலில் கேட்கவில்லை என தெரிவித்தேன் அவர்கள் மன்னிப்பு கேட்ட பின்னர் என்னை செல்ல அனுமதித்தனர்.
அதன் பின்னர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் மீண்டும் மன்னிப்பு கேட்டனர்,என்னை காக்கவைத்தமைக்காக சிரேஸ்ட அதிகாரிகள் அவர்களை கண்டித்தனர் நான் அது எனது தவறுதான் என தெரிவித்தேன்.

மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு - தமிழ்க் குரல்

கேள்வி- தேர்தல் பணிகளில் உங்களது மகத்தான தருணங்கள் மறக்க முடியாத தருணங்கள் என்ன?

பதில்: ஜேவிபி கிளர்ச்சியின் போது 1988-89களில் நாங்கள் நடத்திய தேர்தல்களை மறக்க முடியாது. 1989 பொதுத்தேர்தலின் போது அரசாங்க ஊழியர்கள் அச்சம் காரணமாக தங்களது வீடுகளிலேயே இருந்தனர், நாங்கள் அறிவிப்புகளின் மூலம் அவர்களை அழைக்கவேண்டிய நிலையிலிருந்தோம்.

நாங்கள் இரு அரசாங்க ஊழியர்களை கம்புருப்பிட்டிய யட்டல வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்பினோம்.பெண் ஊழியர் ஒருவரும் பணியிலிருந்தார், எவரும் வாக்களிக்க வரவில்லை, அந்த அரசாங்க ஊழியர்கள் இருவரும் வாக்குபெட்டிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவே எனது தொழில் வாழ்க்கையில் மிகவும் வேதனையளித்த சம்பவம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More