Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர்கள்நாள் ஏதோ ஒரு வகையில் நடக்கும்! | சாள்ஸ்

மாவீரர்கள்நாள் ஏதோ ஒரு வகையில் நடக்கும்! | சாள்ஸ்

5 minutes read

முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் அரச புலனாயவாளர்கள் - சாள்ஸ்  நிர்மலநாதன் | Virakesari.lk

மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்வார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டாலும்,கடந்த வருடம் மாவீரர்களினுடைய , மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களுக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த பெரிய அளவில் தடை விதிக்கப்படவில்லை.

அரசாங்கத்தினுடைய காரணம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று இடம் பெற இருந்த சூழ்நிலையில், தமிழ் மக்களினுடைய வாக்கினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெரிய அளவில் தடை ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது தியாக தீபம் திலிபனுடைய நினைவேந்தல்களின் போது  அவருடைய நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எனக்கும் எடுத்திருந்தார்கள்.

என்னைப் போல பலருக்கும் நீதி மன்ற தடை உத்தரவை எடுத்திருந்தார்கள். அதேபோல நவம்பர் மாதம் 27 ஆம் திகதி    மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுக்கு கூட இந்த அரசாங்கம் முழுமையான நீதிமன்ற தடை உத்தரவை விடுத்திருக்கிறார்.

மேலும் இன்றிலிருந்து(22) செல்லுபடியாகும் ஒரு வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.

இலங்கையினுடைய பொதுமக்களுடைய பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பும் இராணுவம் மற்றும் முப்படைக்கும் அந்த பொறுப்பை   ஒப்படைப்பதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று 22 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக வந்த இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஒரு   அச்ச உணர்வில்   சுயமாக செயற்பட முடியாதவாறு கொண்டு வருவதற்குத்தான் இந்த மாவீரர்களின் அஞ்சலி நிகழ்வுகளுக்கும், பொது மக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பது, குறிப்பாக நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து  மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுகின்ற  நிலையில் அவசர அவசரமாக 22 ஆம் திகதியில் இருந்து  பொது மக்களுடைய பாதுகாப்பு முழுமையாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை நசுக்கி அவர்களை மிரட்டி தான் யுத்தத்தை  எப்படி வழி நடத்திய போது தமிழ் மக்கள் எப்படி அச்ச உணர்வுகளோடு இருந்தார்களோ அதே அச்ச உணர்வை தொடர்ச்சியாக தக்க வைத்து தங்களுடைய குடியேற்றங்களை குறிப்பாக தமிழ் மக்கள் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளுக்கு எதிராக  செயல் படாமல் விடுத்து அச்ச உணர்வு இருக்கின்ற போது   வடக்கு கிழக்கில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை மிக விரைவாக செய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

அதுக்கு தற்பொழுது ‘கியுல் ஓயா’ திட்டம் ஒன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு அடங்கலாக அரசாங்கத்தினுடைய மகாவலி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

பத்தாயிரம்  சிங்கள மக்களை குடியேற்றம் செய்வது. அரசாங்கத்தினுடைய  இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது.

இந்த நாட்டில் ஜனநாயக முற்றுமுழுதாக அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது.

இராணுவத்தினுடைய ஆட்சி இலங்கையில் படிப்படியாக நாளுக்கு நாள்   வைரஸ் போல்  மலர்வதற்கு இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான புதிய சூழ் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவ அதிகாரிகள் செயலாளர்களாக இருக்கின்றார்கள், பொறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். பொது மக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன பயங்கரவாதம் இருக்கின்றது இலங்கையின் பாதுகாப்பு  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு என நான் கேட்க விரும்புகின்றேன்.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று    மார்பு தட்டி சிங்கள மக்களுடைய வாக்கைப் பெற்ற நீங்கள் ஏன் அவசர அவசரமாக இவ்வாறான விடையங்களை மேற்கொள்ள வேண்டும்?.
 இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கை குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

எங்களுடைய மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ் நிலையில் இராணுவத்தின்  பிரசன்னத்தின்  மூலம் மக்களை முழுமையாக கட்டுப்படுத்த ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் இராணுவ தளபதியும் திட்டமிட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எங்களுடைய உறவுகளின் இருப்பிற்காகவும் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்கள், யுத்தத்தில் உயிர் நீத்த பொது மக்கள் அனைவருக்கும் அவர்கள் என்ன தடை விதித்தாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில்   அஞ்சலி செலுத்துவார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
 அவர்களால் மனதால் செலுத்தலாம் அல்லது அவர்களுடைய வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம்.

என்னை கைது செய்வதற்காக நான் பயப்படவில்லை.ஆனால் பொது மக்களை   ஒரு தர்ம சங்கடமான சூழ் நிலைக்கு கொண்டு போகக் கூடாது என்ற ஒரு சூழ் நிலைக்காக தான் அந்த 27ஆம் திகதி  நிகழ்வுக்கு  தடை விதித்த போதும் அதற்குரிய முயற்சிகளை தற்போது வரை எடுக்க வில்லை.

இருந்தாலும் பொது மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக தமது உறவுகளுக்காக    அஞ்சலி நிகழ்வை ஏதோ ஒரு வகையில் முன்னெடுப்பார்கள். என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் கெரரோனா தொற்றில் மரணமடைபவர்களின் சடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பில் நாடாளுமன்றஉறுப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்க்கு பதில் வழங்கிய அவர்

கொரோனா தொற்று உலகத்தில் பல நாடுகளில் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய மதத்தலைவர்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற தங்களுடைய   மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் என்று அதனை நான்   வரவேற்கிறேன் .

அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு சுகாதார அமைச்சின்  ஆலோசனையைப் பெற்று அதை செய்வதை நான் வரவேற்கின்றேக்கின்றேன் குறித்த விடையம்  தொடர்பாக நாடாளுமன்றத்தில் என்னுடைய யோசனையை நான் கூறியிருக்கின்றேன்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்   இலங்கையில் கொரோனா தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய   உடல்களை மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம்    கேட்க விரும்புகின்றேன் மன்னர் என்ன சுடுகாடா? கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றால்   இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல் தான் இருக்கின்றது.

அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய    மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறைஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வது என்பதனை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அது ஒரு நியாயமான செயலும் அல்ல. அபிவிருத்திகளை அம்பாந்தோட்டை   அவர்களுடைய மாவட்டங்களுக்கு செய்து கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கு  மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளார்கள் செய்த மன்னார் மாவட்டம் என்ன சுடுகாடா என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More