Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இம்முறை ஜெனீவா கடந்த காலத்தைவிட தமிழருக்கு சவாலாக இருக்கும் ரவி

இம்முறை ஜெனீவா கடந்த காலத்தைவிட தமிழருக்கு சவாலாக இருக்கும் ரவி

2 minutes read
இம்முறை ஜெனீவா அமர்வுகள் கடந்த காலத்தைவிட தமிழர்களுக்கு சவாலானதாக அமையும்  எச்சரிக்கிறார்!! ரவி - Nakarvu

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜெனிவா அமர்வுகளை விட இந்த முறை இடம்பெறுகின்ற ஜெனிவா அமர்வானது தமிழர்களுக்கு மிகவும் சவாலானதாக அமையும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் ரவி அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இணைய வழிமுறை மூலமான கலந்துரையாடலில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசாங்கங்களினுடைய கூட்டே தமிழர்கள் அரசு அற்றவர்கள். அங்கு தமிழர் தரப்புக்களால் தீர்மானமோ அல்லது கால அவகாசமோ வழங்க முடியாது.

புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் அரசுகளை தமிழர் தரப்புக்காக ஒத்துழைப்பை கோர வேண்டும். இம்முறை இவ்விடயங்களை தமிழர் தரப்பு கையாளவேண்டும் அதாவது பொறுப்புக்கூறல் போன்றவற்றில் இருந்து இலங்கை அரசு விலகி உள்ளமையால் சர்வதேச தீர்ப்பாயம் வேண்டும் எனவும் சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன சில தாமாகவே இல்லாது போகின்றன உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டோர் கள் சிலரின் பெற்றோர்களின் உயிரிழப்பு போன்றவை நிகழ்கின்றமையால் சாட்சியங்களை சேகரித்து ஒழுங்கு படுத்தவேண்டும் எனவும் சர்வதேச தலையீடுகளுடன் கூடிய சிறந்த அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும் எனவும் தமிழர்களை சர்வதேசம் தலையிட்டு காக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பானது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.க

ுறித்த சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவையைச்சேர்ந்த சுதா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More