நடிகர் பிமல் ஜயக்கொடி தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சற்று முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பேஸ்புக் பதிவில் அவர், தான் நேற்று (28) காலை முன்னெடுத்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளின்படி தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேநேரம் அண்மைய நாட்களில் தான் பார்வையிட்ட மற்றும் சந்தித்த நபர்களுக்கு தகவல் அளித்து வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளதுடன், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.