Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 48 ஆயிரத்தை கடந்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை – மேலும் மூவர் உயிரிழப்பு!

48 ஆயிரத்தை கடந்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை – மேலும் மூவர் உயிரிழப்பு!

1 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுள் 236 பேர் மினுவங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மினுவங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 41 ஆயிரத்து 325 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், நோய்த் தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 822 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேவேளை மேலும் மூன்று கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆணொருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 08ஆம் திகதி மரணமானார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர், பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 10ஆம் திகதி மரணமானார்.

மரணத்திற்கான காரணம் புற்றுநோய் நிலை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 09ஆம் திகதி மரணமானார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More