பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது.
இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் இடம்பெற்றது.
இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.https://www.facebook.com/v2.5/plugins/like.php?action=like&app_id=314186966303&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df1690451a67f69c%26domain%3Dwww.virakesari.lk%26origin%3Dhttps%253A%252F%252Fwww.virakesari.lk%252Ff11a450edf7ad9%26relation%3Dparent.parent&container_width=0&font=arial&height=25&href=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F98447&layout=button_count&locale=en_US&sdk=joey&send=false&share=false&show_faces=false&width=90https://www.facebook.com/v2.5/plugins/share_button.php?app_id=314186966303&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df3a58f371edb30c%26domain%3Dwww.virakesari.lk%26origin%3Dhttps%253A%252F%252Fwww.virakesari.lk%252Ff11a450edf7ad9%26relation%3Dparent.parent&container_width=0&href=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F98447&layout=button_count&locale=en_US&sdk=joey