Monday, March 1, 2021

இதையும் படிங்க

ரணில் தலைமைத்துவத்தில் இருந்து மாறும் வரையில் ஐ.தே.க. வுடன் பேச்சுவார்த்தை இல்லை

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள்...

சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து செயற்படுகிறது அரசு!

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை  அரசாங்கம் முழுமையான தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள் சர்வதேச...

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று...

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. டொம் மூடி எதிர்வரும் 3 வருட...

மீண்டும் களமிறங்கவுள்ள முரளி, சனத் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்

வீதி பாதுகாப்பு டி-20 உலகக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி இந்தியாவின் ராய்ப்பூரில் ஆரம்பமாகி மார்ச் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

ஆசிரியர்

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமானவர்களின் படங்களைப் பகிர்பவர்களுக்குத் தடை இல்லை என வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும் முகநூல் தளமானது, ஒரு நாள் முதல் ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது.

அந்த நாளில், ஆதரவு அற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவருக்கு அடுத்த 60 நாட்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்திக்கின்றனர். இவையெல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் என முகநூல் முத்திரை குத்துகின்றது.

ஆனால், 60 இலட்சம் யூதர்களைக் கொன்றதற்காக ஹிட்லர் படத்தை, முகநூல் தளத்தில் பரப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதுபோலவே, இரண்டாம் உலகப் போர்க் குற்றவாளிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் முகநூல் தளங்களில் விரிவாகக் காணக் கிடைக்கின்றன.

அத்துடன், இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றவர்களின் படத்தைப் பகிரவும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் முடக்குகின்றது முகநூல். அவ்வாறு அவரது படத்திற்கு, உலகில் இதுவரை எந்த நாடும் தடை விதித்தது இல்லை. ஆனால், முகநூல் மட்டும் தடை செய்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, இரவோடு இரவாக இடித்துத் தகர்த்துத் தரைமட்டம் ஆக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு, ம.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கடந்த 11ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையை, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகளை அந்தத் தளம் முடக்கி இருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியாக இருக்கின்ற முகநூல், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக் கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது.

சமூக வலைதளங்களுள் உலகளவில் முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முகநூல் (Facebook) நிறுவனத்தின் போக்கு, தான்தோன்றித் தனமாகி வருகின்றது.

தாங்கள் வைத்ததே சட்டம், யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற இறுமாப்பும், ஆணவமும், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. முகநூலின் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கு நீடிக்குமானால், உலக நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும்.

நாடுகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை மதிப்பது இல்லை என அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகநூல் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். பல நாடுகளில் முகநூல் தளத்திற்குப் பல கட்டுப்பாடுகளையும், பல கோடி ரூபாய் தண்டமும் விதித்து இருக்கின்றார்கள்.

எனவே, ஒவ்வொரு நாட்டிலும், தாங்கள் விரும்பியவாறு அரசுகள் அமைய வேண்டும் என்பதற்காக, முகநூல் தளம் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான வகையில் முகநூல் செயற்பட்டு வருகின்றது. தமிழகத் தலைவர்களைக் களங்கப்படுத்த முயல்கின்றது. அவர்களது கருத்துகளைத் திரைபோட்டு மறைக்கின்றது. உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது.

எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவைக்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

வெற்று இடத்தைக் காற்று நிரப்பியே தீரும், முகநூலுக்கு மாற்றுத் தளம் உருவாகியே தீரும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

ரோஹிங்கியா அகதிகளை ஏற்று வேண்டிய பொறுப்பு எமக்கில்லை | வங்கதேசம்

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள்

ஆரம்பமாகியுள்ள 2020 க்கான கல்விப் பொதுத் தரதரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றைய தினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

18 எதிர்ப்பாளர்கள் உயிரிழந்த நிலையில் மியன்மாருக்கான சர்வதேச நாடுகளின் கண்டனம்

ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இதுவரை நடத்திய இரத்தக்களரி ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று...

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. டொம் மூடி எதிர்வரும் 3 வருட...

மேலும் பதிவுகள்

பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி | பாராட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.பிக்பாஸ் ஜூலிஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர்...

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

ஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து | இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.

குருந்தூரில் மீட்கப்பட்டது நாகர் வழிபட்ட இலிங்கம் | யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன்

குருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை...

குருந்தூரில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சிங்கள இலக்கியங்களே சாட்சி | யாழ். பல்கலை பேராசிரியர்

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட...

ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? | நிலாந்தன்

கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....

பிந்திய செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

துயர் பகிர்வு