Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த மற்றும் சஜித் வாழ்த்து!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த மற்றும் சஜித் வாழ்த்து!

1 minutes read

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More