Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்..!

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்..!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் .

மேலும் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த நாட்களாக குறைவடைந்துள்ள போதும் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் கொழும்பு நகர பகுதியில் தொற்று நிலைமை குறைவடைந்திருந்தாலும், வெளிமாவட்டங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகின்றதோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன எனவும் இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More