Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரணைதீவில் அடக்கம் செய்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் | திஸ்ஸ அத்தநாயக்க

இரணைதீவில் அடக்கம் செய்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் | திஸ்ஸ அத்தநாயக்க

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இந்த தீர்மானத்தினால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில்  தற்போது காணப்படும் நிலவரங்களை மேலும் குழப்பும் வகையிலேயே அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களிலும் பொதுவான ஆய்வுகளிலும் நிலத்தடி நீரினூடாக கொவிட் – 19 தொற்று பரவும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. எனினும் அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

எனினும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் எதனடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகவில்லை.

அத்தோடு கொவிட் – 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மேற்குலக சக்திகள் அழுத்தம் வழங்கிவந்தன. அதன் காரணமாகவே  அரசாங்கம் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியது. எனினும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்பு தென்படவில்லை.

அதுமாத்திரமன்றி சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே அடக்கம் செய்ய முடியும் அல்லவா? அவ்வாறிருக்கையில் குறிப்பாக அப்பகுதியைத் தெரிவு செய்ததன் காரணமென்ன? இந்த தீர்மானத்தினால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More