Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது !

7 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது !

1 minutes read

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன.

அதன்படி, ´கொவெக்ஸ்´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம், அஸ்ட்ரா ஸெனெக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 5 ஆயிரத்து 284 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையில் 7 இலட்சத்து 29 ஆயிரத்து 562 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More