Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

1 minutes read

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 10 ஆம் திகதி புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை எனினும், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகும் அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் குறித்தும் மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதம் நடத்த நாடாளுமன்ற அலுவல்கள்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More