செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பதுளை- பசறை பேருந்து விபத்து- சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

பதுளை- பசறை பேருந்து விபத்து- சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

0 minutes read

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 07.15 மணியளவில், லுனுகலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டிக்கு இடமளிக்க முயன்றபோதே, வீதியில் இருந்து விலகி 200 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது.

இதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டி சாரதி, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த சாரதி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.