புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி இன்று முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

குறித்த பகுதியில் சுமார் 400 மாணவிகள் தங்கியுள்ள நிலையில், அங்கிருந்து வெளிச்செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More