செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

0 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 436ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 90 ஆயிரத்து 208 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 647 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பன்சியகம மற்றும் மொரொன்தொட்ட ஆகிய பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

79 வயதுடைய பெண்ணொருவரும் 61 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் பதிவாகிய மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 352 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.