கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தடன், இது தொடர்பாக தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்தும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோருக்கான கொடுப்பனவுகளை செலுத்துகுறித்துத் தெரிவித்துள்ள அவர், தொழில் அமைச்சர், தொழிற்சங்கத்தினர் மற்றும் முதலாளிமார் ஆகியோரின் முன்னர் மேற்கொண்ட தீர்மானத்தைச் செயற்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை. கடந்த வருடம் மார்ச் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் ஆரம்பமானது முதல் 2021 ஏப்ரல் வரையில் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அவர்களில் 11 ஆயிரம் பேருக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.