May 28, 2023 5:35 pm

நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட கூடும்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதில் வைத்தியசாலைகளுக்கு பாரிய பொறுப்பு உண்டு. கடந்த சில தினங்களாக அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையை நாம் அவதானித்தோம்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை உண்டு. சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2000 த்திலும் பார்க்க அதிகரிக்கும் நிலை உண்டு.

தற்போதை இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்துகொள்ள முடியும். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று சுகாதார கட்டமைப்பு என்ற ரீதியில் விரைவாக தொற்றாளர்களை அடையாளங்கண்டு நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல் அல்லது இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் அனுமதித்தல் அல்லது ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதா அல்லது நோயாளர்களை விரைவாக அடையாளங்கண்டு தனிமைப்படுத்தி நோயை அடையாளங்காண்பதா என்பது ஒருபுறத்தில் தீர்மானிக்கப்படும்.

மறு புறத்தில் இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சார்பில் வழங்கப்படும் பங்களிப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்