0
சீனாவிடமிருந்து இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை கோரியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சார்பில் இந்த வேண்டுகோளை தான் முன்வைத்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்தில் ஒருபகுதி நன்கொடையாக வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் 62 நாடுகள் சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்துகின்றன எனவும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.